Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளது: அமைச்சர் மங்கள

In இலங்கை
Published: 07:45 GMT, Feb 25, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Anojkiyan

வடக்கில் நிலங்களை விடுவிக்க இராணுவம் கால அளவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதார்.

தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்தில் கூறியதற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு இராணுவ பயன்பாட்டிற்காக பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2,400 ஏக்கர் நிலங்களை உரியவர் வசமே ஒப்படைக்கப்பட்டது. மேலும் 4,100 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என சமரவீர பதிலளித்தார்.

தமிழர் நலம் காண அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆவணப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எட்ட நமது அண்டை நாடான இந்தியாவும் முக்கிய பங்காற்றியுள்ளது.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ் பேசும் மக்கள் கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் வாழ வகை செய்ய வேண்டும் எனவும் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் மங்கள மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg