Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய அரசியலில் பிரெக்சிற் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: கோர்பின்

In
Published: 08:26 GMT, Feb 25, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கை பிரித்தானிய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் நடைபெற்ற வணிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போது, “பிரித்தானியாவின் அரசியல் நிலைப்பாடு மாறியுள்ளது. பிரெக்சிற் தொடர்பில் மக்கள் தங்களது தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரித்தானியாவின் வெளியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்தோர் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தோர் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் தற்போது தொழிற்கட்சி இறங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg