Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்தித்த ஈழ உணர்வாளர்!

In இலங்கை
Updated: 11:36 GMT, Feb 25, 2017 | Published: 09:11 GMT, Feb 25, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Anojkiyan
kep

விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு பகுதியில் உள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி, சுமார் 26 நாட்களாக போராட்டம் நடத்திவரும் மக்களை, தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ், நேற்று (வெள்ளிக்கிழமை) நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.

அவரது வருகையை வரவேற்ற மக்கள், தாங்கள் படும் துயரங்ளையும் அவரிடம் பகிர்ந்துக்கொண்டனர். இதன்போது அவர் அம்மக்களுக்கு உணர்வுபூர்வமாக தனது ஆதரவினை தெரிவித்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “அகிம்சை முறையில் எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு என்ற ஒற்றை கோரிக்கையுடன் போராடும் இந்த குழந்தைகளுடனும் தாய்மார்களுடனும் இடையில் இருந்து பேசுகிற வாய்ப்பு இறைவன் எனக்கு கொடுத்திருக்கின்ற ஒரு அருட்கொடையாகும்.

உறுதியான நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்களினதும் குழந்தைகளினதும் பாதங்களை தொட்டு வணங்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது.

இந்த மக்களின் உறுதியான போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் வெற்றி பெரும் நாளில் நான் இங்கே இருக்கமாட்டேன் ஆனால் இந்த மக்கள் என்று வெற்றி பெறுகின்றார்களோ அன்று தானும் தான் சார்ந்த தமிழகமும் நிச்சயமாக கொண்டாடும்” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg