Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசு குற்றவாளியின் புகழ் பாடுவதை நிறுத்தவேண்டும் – ஸ்டாலின்

In இந்தியா
Updated: 11:01 GMT, Feb 25, 2017 | Published: 08:46 GMT, Feb 25, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Ravivarman
staa

உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்த பின்பும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் மரம் நடும் திட்டத்தை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தமை, புகழ் பரப்பும் செயலில் அரசாங்கமே ஈடுபடுவதை வெளிப்படுத்துகின்றது என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் புகார் அளித்துள்ளார்.

அரச பணத்தில் திட்டங்களை அறிவித்து குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தி வருவது எதிர்கால தலைமுறையினருக்கு மக்களாட்சியின் மாண்பின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் எனவும் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருப்பதையும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்திருப்பதையும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குற்றவாளியின் பெயரில் உள்ள திட்டங்கள் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் மற்றும் அரச விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் அம்மா உணவகம் , அம்மா குடிநீர், அம்மா உப்பு போன்ற பெயர்களில் தற்போதும் பல உதவித்திட்டங்கள் நடைமுறையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg