Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது தென் ஆபிரிக்கா

In கிாிக்கட்
Updated: 08:41 GMT, Feb 25, 2017 | Published: 08:40 GMT, Feb 25, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Elakkiya
New Zealand v South Africa - 3rd ODI

நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 159 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ள தென் ஆபிரிக்கா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 2:1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.

வெலிங்டனில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றது.

தென் ஆபிரிக்க அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் டிவில்லியர்ஸ் 85 ஓட்டங்களையும் குவிண்டன் டி கொக் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து 272 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 32.2 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 159 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தெரிவானார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg