Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைக்ரோசொப்ட்-இற்கு போட்டியாக அமேசான்

In தொழில்நுட்பம்
Updated: 09:25 GMT, Feb 25, 2017 | Published: 09:25 GMT, Feb 25, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Risha
Amazon-Chime

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்கைப்பிற்கு போட்டியாக புதிய சேவையொன்றை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது.

மிகவும் பிரபல்யமான இச்சேவையினை வழங்கிவரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான் நிறுவனம், Amazon Chime எனும் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

வியாபார நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படவுள்ள இச்சேவையின் ஊடாக அதி உயர் தரம் கொண்ட வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg