Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டது அல் – பாப் நகரம்: துருக்கி தலைமை தளபதி

In உலகம்
Published: 09:29 GMT, Feb 25, 2017 |
0 Comments
1305
icon_com
This post was written by : Sylviya

வடக்கு சிரியாவில் துருக்கி படையினர்கள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் மூலம், அல் – பாப் நகரம் வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டுள்ளது என, துருக்கியின் தலைமை தளபதி நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள மாகாணங்களான காசியன்டெப் (Gaziantep) மற்றும் கிலிஸ் (Kilis) ஆகிய நகரங்களுக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் துருக்கி படையினருக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்குறித்த கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “அல் – பாப் நகரைக் கைப்பற்ற வேண்டும் எனும் இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுவிட்டது. குறித்த பகுதியில் மக்கள் மீண்டும் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

வடக்கு சிரியாவில் துருக்கிப் படையினர்கள் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தனர்.

துருக்கியின் எல்லைக்கு அருகே உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அழிக்கும் பொருட்டும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள குர்தீஷ் போராளிகளை அழிக்கும் பொருட்டுமே துருக்கி தனது படை நடவடிக்கைகளை சிரியாவில் மெற்கொள்ள ஆரம்பித்தது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg