Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொய்க் கூறியே உதவிகோரினோம் அது ஜனாதிபதிக்கும் தெரியும் என்கிறார் ராஜித!

In இலங்கை
Updated: 09:59 GMT, Feb 25, 2017 | Published: 09:59 GMT, Feb 25, 2017 |
0 Comments
1597
This post was written by : Anojkiyan

கடந்த தேர்தலில், முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தக்கூட பணம் இல்லாத வேளை நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அப்போது பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு உங்களது கணக்குகளைத் தீர்ப்போம் என்று பொய்யைக் கூறியே வர்த்தகர்களிடம் உதவிகோரியதாகவும், அது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் தெரியும் என நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கு மைதானத்தில் இன்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியவர்களின அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பத்திரிகையில் முதலாவது தேர்தல் விளம்பரத்தை செய்வதற்குக்கூட எமக்கு பணம் இருக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவிடம் பேசி 60 மில்லியன் ரூபாவை எனது மகன் பெற்றுக்கொண்டுவந்த பின்னரே முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம்.  நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அப்போது பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு உங்களது கணக்குகளைத் தீர்ப்போம் என்று பொய்யைக் கூறியே வர்த்தகர்களிடம் உதவிகோரினோம்.

அவ்வாறே எமது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினோம். அது ஜனாதிபதிக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்சவுக்கு 50 கோடி ரூபாவைக் கொடுத்த வர்த்தகர்கள் எமக்கு வெறும் 5 இலட்சம் ரூபாவையே கொடுத்தனர். சிலவேளை மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுவிட்டால் என்ற எண்ணத்திலேயே அவர்கள் வழங்க முன்வந்தனர். எனினும் யாரும் எதிர்பாராத கீழிருந்தான சக்தி ஒன்று எமக்கிருந்தது. இந்த நாட்டு மக்களே அந்த சக்தியாகும். என கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட தொழிற்சங்க அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg