Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜேந்தர்சிங்குடன் மோதவிருந்த சீன வீரர் திடீரென போட்டியிலிருந்து விலகல்

In விளையாட்டு
Updated: 10:36 GMT, Feb 25, 2017 | Published: 10:29 GMT, Feb 25, 2017 |
0 Comments
1081
This post was written by : Elakkiya

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவரும் இந்திய வீரர் விஜேந்தர்சிங்குடன் அடுத்த போட்டியில் மோதவிருந்த சீன வீரர் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் அவரது விலகல் முடிவுக்கான  காரணம் அறிவிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி விஜேந்தர்சிங் மற்றும் சீன வீரர் சுல்பிகர் ஆகியோருக்கு இடையிலான போட்டி மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாக சுல்பிகர் திடீரென அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திட்டமிடப்பட்ட அதே திகதியில் விஜேந்தர்சிங்குடன் வேறு ஒரு வீரரை மோத வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

இது றித்து விஜேந்தர்சிங் தெரிவிக்கையில், ‘இந்த விடயத்தை நான் சாதகதமாகவே பார்க்கிறேன். சுல்பிகர் என்னுடன் மோதாமல் தவிர்த்ததற்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். எனது அடுத்த போட்டியில் எதிராளி யாராக இருந்தாலும், அவரை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg