Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் கிடைத்தன?

In இந்தியா
Updated: 11:01 GMT, Feb 25, 2017 | Published: 10:41 GMT, Feb 25, 2017 |
0 Comments
1268
icon_com
This post was written by : Ravivarman
jeyaaaaaaa

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் ‘ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்று தேவையில்லாத சர்ச்சையை சிலர் கிளப்பி விடுகிறார்கள். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த போது தினமும் என்ன நடந்தது என்பது தொடர்பான வீடியோவையும் நாங்கள் எடுத்திருக்கின்றோம்’ எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று ஜெயலலிதாவிடம் கேட்டபோது உடல்நிலை தேறி வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்பட இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg