Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் விலை மதிப்பற்ற சொத்து பேனா என்கிறார் தீபா!

In இந்தியா
Updated: 14:35 GMT, Feb 25, 2017 | Published: 11:34 GMT, Feb 25, 2017 |
0 Comments
1393
This post was written by : Ravivarman

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான  ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய தீபா மேற்படி தெரிவித்தார்.

ஆனால் ஜெயலலிதா பயன்படுத்தியதாக கூறப்படும் அந்த பேனா ஒரு பென் டிரைவ் எனவும், அதில் அவர் சொத்து தொடர்பான தகவல்கள், மற்றும் பல இரகசியங்களையும்  பாதுகாத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே ஜெயலலிதாவின் சொத்து மீது ஆர்வம் இல்லை என குறிப்பிடும் தீபா ஏன் ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மீது குறியாக இருக்கிறார் என்பதன் காரணம் வெளிப்பட்டுள்ளது.

இதேபோன்று எம்.ஜி.ஆர் தனது சொத்து தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய ரகசிய எண் ஒன்றை தனது கைக்கடிகாரத்தில் சேமித்து வைத்திருந்ததால் அந்த கடிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg