Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பறிபோகும் பிரதிநிதித்துவம் – கலப்புத் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு

In இலங்கை
Published: 15:39 GMT, Feb 25, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Ravivarman
mno

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான கலப்புத் தேர்தல் முறையானது சிறுபான்மையினங்களின் பிரதிநிதித்துவங்களை அழித்துவிடும் என இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்புதிய தேர்தல் முறைமூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும்போது விகிதாசார அடிப்படையில் சிறுபான்மையினங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களே நேரடியான பாதிப்பிற்கு உள்ளாகுமெனவும் எச்சரித்துள்ளார்.

எனவே இப்புதிய முறையானது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளினதும் சர்வாதிகார ஆட்சிக்கே வழியமைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனால்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, என்பனவும் இப்புதிய கலப்பு உள்ளுராட்சித்தேர்தல் முறையினை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg