Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

In இந்தியா
Updated: 05:05 GMT, Feb 26, 2017 | Published: 04:58 GMT, Feb 26, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Shailu
modi

மேகதாதுவில் அணைகட்ட தொழில்நுட்ப அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிக்கப்பட்டுள்ளதாவது,

‘ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாது உள்ளிட்ட எந்த அணை திட்டத்துக்கும் அனுமதி அளிக்க கூடாது.

அணைகட்ட அனுமதி பெற மத்திய நீர்வள ஆணையத்தை அணுக கர்நாடக திட்டமிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அணைகட்ட அனுமதி அளிக்க கூடாது. அந்தவகையில், மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் செயலானது தன்னிச்சையானதாகும்.

மேகதாது அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடகா அரசு தொடர்ந்து மேற்கொள்வது, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மீறுவதாகவும், தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதுமாகும்.

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் வரை, மேகதாது உட்பட தமிழகத்தை பாதிக்கும் கர்நாடகாவின் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg