Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளராக நீடிக்க தகுதி உள்ளதா? – எஸ்.ஆர்.ராதா கேள்வி

In இந்தியா
Updated: 06:11 GMT, Feb 26, 2017 | Published: 05:37 GMT, Feb 26, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Shailu
Sasikala

சசிகலாவிற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளராக நீடிக்க தகுதி உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள எஸ்.ஆர். ராதா, சசிகலா குடும்பத்தினருக்கு அ.தி.மு.க-வில் பதவி வழங்கினால் கட்சி அழிந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘சசிகலா பொதுச்செயலாளராக நீடித்தால் அவரது குடும்பத்தினரால் அ.தி.முக அழிந்துவிடக்கூடும் என்ற ஐயம் எழுகிறது.

சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக நீடிப்பது அல்லது அவரது குடும்பத்தினருக்கு அ.தி.மு.க-வில் பதவிக் கொடுப்பது என்பதை நிச்சயமாக மனப்பூர்வமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சசிகலாவிற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளராக நீடிக்க என்ன தகுதியுள்ளது.  அண்ணா மறைகிற நேரத்தில், இந்தக் கட்சியை அழிப்பதாக இருந்தால், இந்த கட்சியில் இருப்பவன்தான். அதை செய்ய வேண்டுமே தவிர இதற்கு எதிரிகள் வெளியே இருந்து வரமாட்டார்கள் என்று சொன்னார்.

அது இன்று உண்மையாகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகின்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக்கை கட்சியினர் தூக்கிப் பிடிப்பதை ஏற்க முடியாது. அவர்களால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

மேலும் கட்சியை வழிநடத்தும் தகுதி சசிகலாவுக்கு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்த பிறகே என்னுடைய நிலைப்பாட்டை அறிவிப்பேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg