Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸிடம் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றவே சசிகலாவை முதல்வராக்க விரும்பினோம்: செங்கோட்டையன்:

In இந்தியா
Updated: 07:02 GMT, Feb 26, 2017 | Published: 06:09 GMT, Feb 26, 2017 |
0 Comments
1312
This post was written by : Shailu

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என தெரிவித்துள்ள பாடசாலைக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை விற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல்வராக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் பாடசாலைக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.இதன்போது உரையாற்றிய அவர், தான் சசிகலாவை முதல்வராக்க விரும்பியது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார். அதுவே சசிகலா முதல் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் துடித்தற்கு காரணம்.

இந்தக் கட்சியை பன்னீர்செல்வம் விற்றுவிடக் கூடாது என்பதற்காகவும், இரட்டை இல்லை சின்னத்தை முடக்கிவிடக் கூடாது என்பதற்காகவும் தான் சசிகலாவிற்கு ஆதரவு வழங்கினோம்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை கூடியபோது அதிக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எந்தளவு அமைதியாக இருந்தோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg