Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு-இருவர் படுகாயம்

In ஐரோப்பா
Published: 06:40 GMT, Feb 26, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Anojkiyan
run

ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியின், பிரபல கடைவீதியில் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதி, 73 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பகுதியில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான ஹெய்டல்பர்க் நகரின் பரபரப்பான கடைவீதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும், இவ் விபத்தின் போது, ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சுமார் 32 வயதுடைய ஆண் ஒருவரும், போஸ்னியா ஹெர்ஸெகோவினா நாட்டை சேர்ந்த சுமார் 29 வயது பெண் ஒருவரும் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இந்த விபத்து, தீவிரவாத தாக்குதல் தான் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருகாமையில் உள்ள பிரதான சாலை வழியாக வேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தாலேயே குறித்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவ் விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg