Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும்: தமிழிசை

In இந்தியா
Updated: 06:25 GMT, Feb 26, 2017 | Published: 06:25 GMT, Feb 26, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Shailu
Tamilisai

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என தமிழக பா.ஜ.க. தலைவர் டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று (சனிக்கிழமை) தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பட்டாசுக்கள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

‘தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்தல் நடத்தப்படும் போது, அந்த தேர்தலை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, தமிழக பா.ஜ.க. சிறப்பாக செயற்படும்.

உள்ளூராட்சி தேர்தலை சந்திக்க தேவையான ஆயத்த பணிகளை ஆரம்பித்து விட்டோம். உள்ளூராட்சி தேர்தலில் தமிழக பா.ஜ.க, தனித்து போட்டியிடும்.

மேலும் தேவை ஏற்பட்டால் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg