Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாறிவருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

In இந்தியா
Updated: 07:45 GMT, Feb 26, 2017 | Published: 07:11 GMT, Feb 26, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Shailu
modi

டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக நாட்டு மக்களுக்கு  ”மான் கி பாத்” நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார்.

அந்தவகையில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 29ஆவது மான் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஒரே ரொக்கெட்டில் 104 செயற்கைகோள்களை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் தெரிவித்த அவர், விவசாயிகளின் கடின உழைப்பால் உணவு தானிய உற்பத்தி 2,700 தொன்களாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக பெண்கள் தினமாக மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, நமது பெண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg