Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிசிலியை வந்தடைந்தனர் 700க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள்!

In ஐரோப்பா
Published: 07:48 GMT, Feb 27, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Anojkiyan

இத்தாலியக் கடலோரக் காவல் படையினரால் பாதுகாக்கப்பட்ட சுமார் 730 குடியேற்றவாசிகள் நேற்று (சனிக்கிழமை) அகஸ்டா என்ற சிசிலியன் துறைமுகத்தை வந்தடைந்தனர்.

இதில், அதிகளவான கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் மத்திய தரைக்கடலில் பயணித்த 2750 குடியேற்றவாசிகளை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் பெரும்பாலும், நைஜீரியா, எரித்திரியா மற்றும் சூடான், சிரியா ஆகிய நாடுகளை சேர்த்தவர்கள் ஆவர்.

இதில் 100 பெண்களும், 20 கர்ப்பிணிப்பெண்களும் அடங்குவதாகவும் இதில் பலர் துணையின்றியே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதில் ஆதரவற்ற 70 சிறுவர்கள் வந்தடைந்ததாகவும், அதில் 15 பெண் பிள்ளைகள் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg