Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘எமது நிலத்தில் எம்மை வாழவிடுங்கள்’ – உரும்பிராயில் போராட்டம்

In இலங்கை
Updated: 07:58 GMT, Feb 26, 2017 | Published: 07:57 GMT, Feb 26, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
urumbirai (1)

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவித்து உரும்பிராய் பங்குத் திருச்சபை மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

உரும்பிராய் – பலாலி வீதியில் இன்று காலை இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி எம்மை வாழ விடு’, ‘இன்னும் எத்தனை காலம்தான் நாங்கள் அகதியாக வாழ்வது?’, ‘நல்லாட்சி அரசில் நல்லதைச் செய்யுங்கள்’, ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன?’ போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கியிருந்ததோடு, ‘காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? அவர்களை மீட்டுத்தாருங்கள்’ என கோஷங்களையும் எழுப்பினர்.

urumbirai (2) urumbirai (3) urumbirai (4)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg