Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையின் செயலாளரானார் ஜெ.தீபா

In இந்தியா
Updated: 08:33 GMT, Feb 26, 2017 | Published: 08:32 GMT, Feb 26, 2017 |
0 Comments
1329
This post was written by : Shailu

எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நானே செயல்படுவேன் என தெரிவித்துள்ள ஜெ.தீபா, நாளை (திங்கட்கிழமை) பேரவையின் கொள்கைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஜெ.தீபா இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில்,

‘எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையின் செயலாளராக நான் செயல்படுவேன். பேரவையின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகள் குறித்து நாளை அறிவிக்கப்படும்.

உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே விரைவில் என்னிடமிருந்து அரசியல் அறிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

மேலும் நான் அரசியலில் ஈடுபவதை பலர் தடுக்கின்றனர். ஆனாலும் தடைகளை தகர்த்து மக்களுக்கு பணியாற்றுவேன்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg