Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்னி பல்கலைக்கழகத்திற்கு ஆதரவு கோரி வவுனியாவில் பேரணி

In இலங்கை
Published: 08:25 GMT, Feb 26, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
465519837

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான கோரிக்கையை வலுப்படுத்தும் நோக்கோடு வவுனியாவில் இடம்பெறவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும் என வவுனியா வளாகத்தின் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வவுனியா குருமன்காடு பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக ஆரம்பித்து, நகர் வழியாக இப் பேரணியை நடத்த வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், மாணவர் சங்கங்கள், பொது அமைப்புகள் என்பன தீர்மானித்துள்ளன.

நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல்கலைக்கழக வளாகங்கள் பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், வவுனியா வளாகமானது தொடர்ந்தும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழேயே செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், காலத்தின் தேவை கருதி வவுனியா மாவட்டத்தில் தனி பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது அவசியமென புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg