Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு இனியும் ஏமாறமாட்டோம்: காணாமல் போனோரின் உறவுகள்

In இலங்கை
Updated: 08:40 GMT, Feb 26, 2017 | Published: 08:40 GMT, Feb 26, 2017 |
0 Comments
1278
This post was written by : Varshini

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த மாதம் 23ஆம் திகதி தம்மால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிபோல் இனியும் இடம்பெற தாம் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இம் மக்கள், அரசாங்கத்தை நம்புவதற்கு இனியும் தயாரில்லையென தெரிவித்துள்ளனர்.

தமது போராட்டத்திற்கு பொது அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் என சகலரும் ஆதரவு வழங்க முன்வர வேண்டுமெனவும் இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டுமெனவும் கோரி இம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

missing person protest (2) missing person protest (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg