Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2017 சட்டசபைத் தேர்தல் உ.பி.யின் தலைவிதியை மாற்றுவதற்கான தேர்தல் ஆகும்: அமித் ஷா

In இந்தியா
Updated: 10:14 GMT, Feb 26, 2017 | Published: 10:14 GMT, Feb 26, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Shailu
amith-shah

2017ஆம் ஆண்டுக்கான சட்டசபைத் தேர்தல், உத்தரப்பிரதேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான தேர்தல் ஆகும் என பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லக்னோ உள்ள அம்பேத்கர் நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

‘இந்த சட்டசபைத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக இது காணப்படுகின்றது.

ஊழல் கட்சிகளான சமாஜ்வாதியும், காங்கிரசும் இணைந்து மக்களை ஏமாற்றுகிறது. மாயாவதியும் அகிலேஷ் யாதவும் ஒருவரைக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டி கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை பாழாக்கி விட்டனர்.

தற்போது, நடைபெறும் தேர்தல் ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பதற்காக மட்டும் அல்ல உத்தரப்பிரதேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான தேர்தல் ஆகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg