Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கால்பந்து வீரர் பீலேவின் மகன் எடின்ஹோ பொலிஸில் சரண்

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:52 GMT, Feb 26, 2017 | Published: 08:52 GMT, Feb 26, 2017 |
0 Comments
1336
This post was written by : Surenth

பிரேஸில் கால்பந்து அணியின் முன்னணி வீரர் பீலேவின் மகன் எடின்ஹோ, பண மோசடி மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார்.

முன்னதாக அவருக்கு குறித்த வழக்கில் 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்து அவரது தண்டனை காலம் 12 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சா பாலொ மாநில நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்படி அவரது தண்டனை காலத்தை 12 ஆண்டுகளாக குறைத்துடன் மீண்டும் அவரை சிறை பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து, பீலேவின் மகன் எடின்ஹோ, சாண்டோஸ் நகரத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என முறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரேஸிலின் சேன்டோஸ் கால்பந்து கழகத்தின் தொழில் முறை கோல் காப்பாளராக, பீலேவின் மகன் எடின்ஹோ விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg