Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டு. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து கிரான் குளத்தில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 09:21 GMT, Feb 26, 2017 |
0 Comments
1187
This post was written by : Vithushagan
unnamed (3)

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து கிரான் குளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கிரான்குளம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நே. விமலராஜ் மீதான சூட்டுச் சம்பவத்தை கண்டித்தும் நீதி விசாரணையை கோரி கிரான்குளம்  மகா விஷ்ணு தேவாலயத்திற்கு  முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நேர்மைக்கு பரிசு துப்பாக்கி ரவையா, காணி பணிப்பாளர் மீதான கொலை முயற்றியை கிடப்பில் போடாதே, போன்ற பல பதாதைகளை தாங்கியவாறு நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற  உறுப்பினர் எஸ். வியாழேந்தின், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிரிஸ்னபிள்ளை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பத்தில் படுகாயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் இது தொடர்பாக விசாரணை  தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed (1)

unnamed (2)

unnamed unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg