Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் ஹசாரே கிண்ண போட்டியில் தமிழக அணி வெற்றி

In கிாிக்கட்
Updated: 11:37 GMT, Feb 26, 2017 | Published: 10:42 GMT, Feb 26, 2017 |
0 Comments
1216
This post was written by : Surenth

விஜய் ஹசாரே கிண்ணத்திற்கான போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி வெற்றி பெற்றது.

கட்டாக்கில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் 42 ஓட்டங்களால் டெல்லி அணியை தமிழக அணி தோற்க்கடித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழக அணி 50 ஓவர்கள் நிறைவில் 314 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தினேஷ் கார்த்திக் 97 பந்துக்களில் 118 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 272 ஓட்டங்களை பெற்றது. இதன்படி 42 ஓட்டங்களால் தமிழக அணி வெற்றியை பதிவு செய்தது.

இதேவேளை, ஜார்க்கண்ட் அணிக்கும் கர்நாடக அணிக்கும் இடையிலான போட்டியில் கர்நாடக அணி 5 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg