Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவிலும் கடலட்டை உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்: அமைச்சர் மஹிந்த

In இலங்கை
Updated: 10:46 GMT, Feb 26, 2017 | Published: 10:46 GMT, Feb 26, 2017 |
0 Comments
1180
This post was written by : Varshini

மன்னார் மாவட்டத்தில் விரைவில் கடலட்டை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிலும் கடலட்டை உற்பத்தி நிலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்-

”கடற்தொழில் அமைச்சினை பொறுத்தவரையில் இலங்கையில் முதன்முதலாக கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதி மன்னாரிலேயே அமைக்கப்படுகிறது.

கடலட்டை உற்பத்தி தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில் அதன் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் செயற்கை முறை இனப்பெருக்கத்தின் மூலம் அதனை விருத்தியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன்மூலம் அதிகளவான வருமானத்தையும் வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

உலக சந்தையில் கடலட்டைக்கு காணப்படும் கேள்வியில் நூற்றிற்கு 10 வீதத்தைக்கூட எம்மால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, செயற்கை முறை இனப்பெருக்கத்தின் மூலம் கடலட்டையின் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். அத்தோடு, சந்தை வாய்ப்பினையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.

இத் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 400 குடும்பங்களுக்கான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் எமது கட்சியின் ஊடாக இன, மத, வேறுபாடுகள் இன்றி, அனைவரும் இலங்கை மக்கள் என்கின்ற கொள்கைக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றோம். மக்களிடையே சகல விடயங்களும் சமமாக பகிரப்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பிரிவினையை மறந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் எமது கட்சியூடாக அனைவரும் ஒன்றிணைந்து இத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg