Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச அதிகாரிகள் மீதான தாக்குதல்களின் பின்புலத்தில் யார்? – வியாழேந்திரன் கேள்வி

In இலங்கை
Updated: 12:09 GMT, Feb 26, 2017 | Published: 12:08 GMT, Feb 26, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Vithushagan
13692616_663019150522350_4532240538265913215_n

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளின் மீது இடம்பெற்றுவரும் தாக்குத்கள் கொலைகள் திட்டமிட்ட வகையிலே இடம்பெற்று வருகின்றது எனவே எப்படி இந்த ஆயுதங்கள் உள்ளே வந்தது யார் இதை கொண்டுவந்தவர்கள், இது யாரிடம் இருக்கின்றது இதை பின்புலத்தில் இருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்தார்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நே. விமலராஜ் மீதான சூட்டுச் சம்பவத்தை கண்டித்தும் நீதி விசாரணையை கோரி மட்டக்களப்பு கிரான்குளம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயத்திற்கு  முன்பாக கண்டன கவனயீர்பு ஆர்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“கடந்த ஆட்சி காலத்திலே மிக அதிகளவான துன்பங்களையும் இழப்புக்களையும் சந்தித்த எமது மக்கள் இந்த நாட்டிலே பெரும்பான்மை சமூகத்திற்கு இணையாக நிம்மதியாக சுதந்திரமாக தங்களுடைய தாயக தேசத்தில் தங்களின் நிலத்திலே வாழவேண்டும் என்பதற்காக 2015 ஜனவரி மாதம்  நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக எங்களுடைய தமிழ் மக்கள் தங்களை தியாகம் செய்து நல்லாட்சியை கொண்டுவந்தார்கள்

இன்று நல்லாட்சி பெற்று இரண்டுவருடம் முடிந்து மூன்றாவது வருடம் நுளைகின்ற இந்த தருணத்தில் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நே. விமலராஜ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை எடுத்துப் பார்க்கின்றபோது 2015 நல்லாட்சி ஏற்பட் பின்பு திட்டமிட்ட வகையிலே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளின் மீது அடித்து தன்புறுத்துதல் அடித்து கொலை செய்தல் சுட்டு கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது

விமலராஜ் பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து முதல் நியமனத்தில் இருந்து தொடர்ச்சியாக சுடப்படும் வரை காணி பிரதி ஆணையாளராக இருந்துள்ளார் இவர் மாவட்டத்தில் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு சட்ட ரீதியாக மேற் கொண்டபோது சட்டத்திற்கு விரோதமானவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

இந்த நிலையில் அண்மித்த காலமாக அரச காணிகளை திட்டமிட்டு சில பின்புலங்களுடன் அபகரிப்பேர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சம்பவ இடத்திற்கு சென்று களத்திலே நின்று கொழும்பிலே உள்ள தனது மேலதிகாரிகளை மட்டக்களப்பிற்கு வரவழைத்து சட்டத்திற்கு புறம்பாக அபகிக்கப்பட்ட காணிகளை மீண்டும் சட்டத்தைக் கொண்டு எடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

 ஆனால் இந்த பாராட்டு முழுமைபெற வேண்டுமாயின் இந்த சூட்டு சம்பவத்தை செய்கின்ற சூத்திரதாரிகள்  அதனைப் பின்புலத்தில் இருந்து இயக்குகின்றவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் விமலராஜ் சூட்டுச் சம்பவம் இந்த மாவட்டத்தில் கடைசி சம்பவமாக இருக்கவேண்டுமாயின் குறித்த குற்றவாளி யார் என்பது அடையாளப்படுத்தப்படவேண்டும்

இன்று மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்கையை சுமுகமான வாழ்கையை கொண்டு நடத்துவதற்கு பயப்படுகின்றார்கள் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு இங்கே எந்தவிதமான ஆயுத கலாச்சாரமம் இல்லை ஆயுததாரிகளும் இல்லை என்று சொல்லுகின்ற இந்த அரசினுடைய நிலைப்பாட்டிலே எப்படி இந்த ஆயதங்கள் உள்ளே வந்தது யார் இதை கொண்டுவந்தவர்கள், இது யாரிடம் இருக்கின்றது இதை பின்புலத்தில் இருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த நல்லாட்சி அரசை கொண்டுவந்த மக்கள் இன்று அந்த அரசை நீதி வேண்டி போராடவேண்டிய நிலமையை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது எனவே  பொலிசார் இதை சவாலாக எடுத்துக் கொண்டு  குற்றவாளிளை கைது செய்யவேண்டும்” என்றார் .

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg