Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனே மைதானம் எதிரணிக்கு தான் வெற்றி வாய்ப்பை வழங்கும்: ஹர்பஜன் சிங்

In கிாிக்கட்
Published: 12:34 GMT, Feb 26, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Surenth
harbhajan

புனே மைதானம் எதிரணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்க கூடியது என இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

புனேயில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்ரேலிய அணியின் ஓ’கீப் 12 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மைதானத்தில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் பந்து வீசி விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒவ்வோரு விக்கெட்டை கைப்பற்றவும் மிகுந்த சிரமப்பட்டதாகவும் ஆனால் புனே மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அமையும் எனவும் கூறினார்.

தான் இந்த புனே மைதானத்தை ஒரு நாளும் சிறந்த மைதானம் என்று சொல்ல மாட்டேன் எனவும் ஓ’கீப் எவ்வாறு வேறு மைதானத்தில் பந்து வீசுகின்றார் என்று பார்ப்போம் எனவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg