Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு முன்னாள் மேயரின் கணவர் கைது

In இலங்கை
Updated: 14:46 GMT, Feb 26, 2017 | Published: 14:46 GMT, Feb 26, 2017 |
0 Comments
1372
This post was written by : Vithushagan

மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலை இடம்பெற்ற கோடரி வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயரின் கணவர் கனகசபை பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததோடு  முன்னாள் மேயரின் கணவரையும் சந்தேகத்தின் பேரில் தேடிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்டில் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg