Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணப்பாடு படகு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

In இந்தியா
Updated: 04:49 GMT, Feb 27, 2017 | Published: 04:28 GMT, Feb 27, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Risha
manapad_2721958f_19419

தூத்துக்குடி – மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்க கடலோரத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளமான மணப்பாடு கடலில் சுமார் 20 பேருடன் பயணித்த படகு, எதிர்பாராதவிதமாக திடீரென்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg