Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பை சந்திக்க மறுத்தார் உயிரிழந்த அமெரிக்க கடற்படை வீரரின் தந்தை

In
Updated: 05:03 GMT, Feb 27, 2017 | Published: 04:38 GMT, Feb 27, 2017 |
0 Comments
1553
icon_com
This post was written by : Sylviya
Athavan News card

அல் கொய்தாவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யேமனில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை வீரரின் தந்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த கடற்படை வீரரின் சடலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது மனமுடைந்து போயிருந்த குறித்த வீரரின் தந்தை, ‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், ட்ரம்பை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி நடத்தப்பட்ட குறித்த திடீர் சோதனை நடவடிக்கையே ட்ரம்பின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட முதலாவது திடீர் சோதனை நடவடிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.

ரயன் ஓவன்ஸ் (Ryan Owens) கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் செய்தித்தாள் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவரது தந்தை பில் ஓவன்ஸ் (Bill Owens), ‘பதவிக்கு வந்து ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில், ஏன் அது போன்ற ஒரு முட்டாள் தனமான சோதனை நடவடிக்கைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டார்?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg