Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சர் எடப்பாடியை சந்திக்கவுள்ள நெடுவாசல் மக்கள்

In இந்தியா
Updated: 05:39 GMT, Feb 27, 2017 | Published: 05:14 GMT, Feb 27, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Risha
nedu

இயற்கை எரிவாயு திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, குறித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நெடுவாசல் மக்களுடன் பேசிய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி 6 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

முதலமைச்சருடனான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், முதலமைச்சரின் டெல்லி விஜயம் காரணமாக குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்றுவரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி நேற்று மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg