Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் ஹசாரே டிராபி: தோனியின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஜார்கண்ட் அணி வெற்றி

In கிாிக்கட்
Updated: 05:11 GMT, Feb 27, 2017 | Published: 04:49 GMT, Feb 27, 2017 |
0 Comments
1436
icon_com
This post was written by : Shailu
dhoni

விஜய் ஹசாரே டிராபியில் தோனியின் அதிரடி துடுப்பாட்டத்தால், ஜார்கண்ட் அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மாநில அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கொண்ட விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஒரு லீக்கில் ‘டி’ பிரிவில் போட்டியில், டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சத்தீஸ்கர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஜார்கண்ட் அணி 57 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணற ஆரம்பித்தது. 7-வது விக்கெட்டுக்கு டோனியுடன், நதீம் ஜோடி சேர்ந்தார். டோனி 107 பந்துகளில் 129 ஓட்டங்களில் குவித்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரிகளும்  6 சிக்சர்களும் அடங்கும்.

டோனியின் சதத்தால் ஜார்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர் 244 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சத்தீஸ்கர் அணி,  38.4 ஓவர்களில் 165 ஓட்டங்களைப்  பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து தோனியின் அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியில், வருண் ஆரோன், நதீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg