Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலியில் பெய்த அடை மழையில் சிக்கி மூவர் உயிரிழப்பு – 7 பேரை காணவில்லை

In உலகம்
Published: 05:34 GMT, Feb 27, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Sylviya

சிலியில் கடந்த வார இறுதி நாட்களில் பெய்த அடை மழையினால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் குறைந்தது 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறான இந்த அடை மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், அதனால் சுமார் 3,387 பேர் தங்களது வீடுகளை இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அடை மழை காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடிநீரின்றி அவதியுற்று வருவதாக  செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஒனேமி அவசர சேவை (Onemi emergency service), அடை மழை காரணமாக திருத்தப்பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த உட்துறை அமைச்சர் மரியானோ ஃபர்னான்டஸ் (Mariano Fernandez), “சான்டியாகோவில் உள்ள சுமார் 33 சமூகங்கள் குடிநீரின்றி அவதியுற்றுள்ளனர். அவர்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. காணாமல் போனோரை தேடும் பணியில் அவசரகாலக் குழுக்கள் மும்முரம் காட்டி வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர தேவைகளை செய்வதற்கும், குடிநீர் விநியோகத்தை சீரமைப்பதற்கும் அவசர பணிக் குழு செயற்பட்டுவருதாக ஜனாதிபதி மைக்கேல் பச்சிலட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, தெற்கு சான்டியாகோவில் உள்ள ஓ’ஹிக்கிங்ஸ் (O’Higgins) பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோடைக் காலங்களில் இது போன்ற அடை மழை பெய்வது வழமைக்கு மாறானது என தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg