Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொறியியலாளர் கொலை தொடர்பில் ட்ரம்ப் பொறுப்புக் கூறவேண்டும்: இந்தியா வேண்டுகோள்

In இந்தியா
Updated: 09:41 GMT, Feb 27, 2017 | Published: 06:11 GMT, Feb 27, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Surenth
srinivas kuchibhotla purinton

இந்திய பொறியியலாளர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இந்திய பொறியியலாளர் சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பதில் சொல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் அமெரிக்காவிற்கு உள்ளதெனவும் குறிப்பாக அதிபர் ட்ரம்ப் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க மக்களும் இந்த கொலைக்கு தமது கண்டனத்தை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இத்தகைய இனவெறித் தாக்குதல் அந்த நாட்டுக்கே அவமானமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, அமெரிக்காவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயற்பாடுகளுக்கு மக்கள் அச்சமின்றி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg