Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசு தமிழக மக்களை பலியாடுகளாக நோக்குகிறது: வைகோ

In இந்தியா
Published: 05:41 GMT, Feb 27, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Risha
Vaiko

தமிழக மக்களை பலியாடுகளாக கருதியே இயற்கை எரிவாயு திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயற்படுத்த மத்திய அரசு முனைகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் என்ற புதிய பெயரில் தமிழகத்தில் செயற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை செயற்படுத்த ம.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் ம.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

பல்வேறு மாநிலங்கள் இருக்கின்ற நிலையில், இந்த திட்டத்தை செயற்படுத்த மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை தெரிவு செய்துள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த திட்டத்தை செயற்படுத்ததியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg