Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராளிகளின் வசமுள்ள சிரிய பகுதிகள் மீது விமான தாக்குதல்கள்: நால்வர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:18 GMT, Feb 27, 2017 | Published: 06:07 GMT, Feb 27, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Sylviya
04

சிரியாவின் அல் வேர் (al-Waer) மாவட்டத்தில் போராளிகளின் வசமுள்ள பகுதிகள் மீது விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமானத் தாக்குதல்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டதாக SMART எனும் சர்வதேச செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான காணொளி ஒன்றையும் குறித்த செய்திச் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைகள் அவதானிப்புக் குழு இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, இந்த விமான தாக்குதல்களில் ஹொம்ஸ் பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் டமஸ்கஸ் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

சிரியாவில் யுத்தநிறுத்தத்தை கொண்டு வரும் வகையில் ஜெனீவாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இது போன்ற தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg