Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேசிய அரச கட்டிடத்தின் முன்றலில் குண்டுத் தாக்குதல்

In உலகம்
Updated: 12:06 GMT, Feb 27, 2017 | Published: 06:36 GMT, Feb 27, 2017 |
0 Comments
1242
icon_com
This post was written by : Sylviya

இந்தோனேசிய அரச கட்டிடத்தின் முன்றலில் இன்று (திங்கட்கிழமை) காலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்த பொலிஸாரால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதல் இந்தோனேசியாவின் பன்டாங் (Bandung) பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணிக்கு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த குண்டுவெடிப்பில் எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், “மோட்டார் வண்டி ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கட்டிடத்தின் முன்றலில் இருந்த மேசையின் மீது பிரஷர் குக்கர் (pressure cooker) ஒன்றை இறக்கி வைத்தார். அதை இறக்கி வைத்த சிறிது நேரத்திலேயே அது வெடித்துச் சிதறியது. குறித்த நபர், அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது அவர் பொலிஸாரால் சுடப்பட்டார்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர், “தாக்குதலை நடத்தியவர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார். எனினும் அவரை காப்பாற்றும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். ஏனெனில் அவர் யார், எங்கிருந்து வந்தார், ஏன் இந்த தாக்குதலை முன்னெடுத்தார் ஆகிய விடயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg