Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு துப்பாக்கிச்சூடு எதிரொலி – யாழிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 07:37 GMT, Feb 27, 2017 | Published: 07:05 GMT, Feb 27, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Ravivarman
jaff2

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தினைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக அரச அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதவி அரசாங்க அதிபர், சமுர்த்தி ஆணையாளர், நிர்வாக அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

‘குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும்’,  ‘நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’,  ‘அரச அதிகாரிகளை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் மட்டக்களப்பு – களுதாவளை கடற்கரை வீதியில் வைத்து, மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaff1 jaff3

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg