Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார்?

In இந்தியா
Updated: 07:46 GMT, Feb 27, 2017 | Published: 07:39 GMT, Feb 27, 2017 |
0 Comments
1480
icon_com
This post was written by : Surenth
India President House fina

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தலில் போட்டியிட சுஷ்மா சுவராஜ், சுமித்ரா மகாஜன், முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய குடியரசு தலைவரின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் பாரதிய ஜனதா சார்பில் இவர்களது பெயர்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக பாரதிய ஜனதா சார்பில் மூத்த தலைவர் அத்வானி நிறுத்தப்படுவார் என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அத்வானியை பாரதிய ஜனதா தலைவர்கள் விரும்பவில்லை என்றும் சுஷ்மா சுவராஜ் நிறுத்தப்பட்டால் அவருக்கு அத்வானியின் ஆதரவும் கிடைக்கும் என்றும் கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியரசு தலைவர் தேர்வானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் அரைவாசிக்கும் அதிகமான ஆதரவை பெற வேண்டும்.

இதன்படி, 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 11ஆம் திகதி வெளியிடப்படும். இதனையடுத்து மார்ச் மாதம் இறுதி வாரத்தில் குடியரசு தலைவருக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg