Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றது மூன்லைட்!

In
Published: 08:30 GMT, Feb 27, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வரும் 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ‘மூன்லைட்’ எனும் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.

பல ஹொலிவுட் திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் மற்றும் மாடல் அழகிகள் என பலர் கலந்துகொண்டிருந்த குறித்த விழாவில் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது, சிறந்த திரைப்படத்திற்கான விருது லா லா லேன்ட் (La La Land) எனும் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

அனைத் தொடர்ந்து லா லா லேன்ட் திரைப்படக்குழுவினர் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியிருந்த போதே, குறித்த அறிவிப்பில் சிறிய திருத்தம் உள்ளதென்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மூன்லைட்டே தட்டிச் சென்றுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

குறித்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன், அனைவரது கரகோஷத்திற்கு மத்தியில் மேடை ஏறிய மூன்லைட் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான பார்ரி ஜென்கின்ஸ் (Barry Jenkins), “லா லா லேன்ட் குழுவினர் மிகுந்த திறன் படைத்தவர்கள். அவர்களுடைய திறமைக்கு நான் தலை வணங்குகின்றேன். இந்த விருது மூன்லைட்டுக்கு கிடைத்துள்ளமை என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டது” என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்த போது, “இந்த திரைப்படத்தை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் வெளிக்கொண்டுவரவில்லை எனவே நான் நினைத்தேன். ஆனால் எம்மை பொதுமக்கள் தெரிவு செய்து விட்டார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்தார்.

மூன்லைட் என அழைக்கப்படும் குறித்த திரைப்படம், கறுப்பின ஆண் ஒருவர் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மிக அழகாக சித்தரித்து காட்டியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg