Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடே கொதித்தெழுந்துள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

In இந்தியா
Updated: 09:34 GMT, Feb 27, 2017 | Published: 09:01 GMT, Feb 27, 2017 |
0 Comments
1404
icon_com
This post was written by : Surenth
o-panneerselvam-narendra-modi

தமிழ்நாடே கொதித்தெழுந்து எதிர்க்கத் தொடங்கியிருக்கும் ஹைட்ரோ காபன் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் எதிர்ப்பின் நியாயத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் ஆவதற்கு முன்னர் குறித்த திட்டம் தொடர்பான அறிவிப்பை கைவிட வேண்டுமெனவும் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அதனை தீர்த்து வைத்து மக்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பது தான் மக்கள் நல அரசு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg