Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேகதாது அணையை கட்ட கர்நாடகத்திற்கு உரிமை உள்ளது என்கிறார் சித்தராமையா

In இந்தியா
Updated: 09:51 GMT, Feb 27, 2017 | Published: 09:30 GMT, Feb 27, 2017 |
0 Comments
1324
This post was written by : Surenth

கர்நாடகத்திற்கு சட்ட ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மேகதாது அணையை கட்ட முழு உரிமை உள்ளது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேகதாது அணை கட்டும் விடயத்தில் தமிழக அரசு தேவை இல்லாமல் அரசியல் செய்கிறது. கர்நாடகத்திற்கு சட்ட ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அணை கட்ட முழு உரிமை உள்ளது. குறித்த அணைக்கட்டு, கர்நாடகத்திற்கு உட்பட்ட பகுதியில்தான் உள்ளது. எனவே இந்த அணைக்கட்டு பணியை நிறைவேற்றுவதானால் யாரிடமும் அனுமதி பெறவேண்டிய தேவையில்லை.

ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு. வழக்கமாக மழை பெய்யும்போது தண்ணீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது. ஆனால் தற்போது சிக்கல் உள்ளது. பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுகிறது. இத்திட்டத்திற்கு தமிழகம் தேவை இல்லாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றது” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg