Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி

In இலங்கை
Updated: 09:55 GMT, Feb 27, 2017 | Published: 09:36 GMT, Feb 27, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Vithushagan

வாகன மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விமல் வீரவன்சவினால் முன்வைக்கப்பட்ட மனுவை இன்று (திங்கட்கிழமை) ஆராய்ந்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 41 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிதி மோசடி தடுப்புப் பிரிவினரால் விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg