Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேர் ஜெரால்ட் கொஃப்மன் காலமானார்

In
Updated: 10:01 GMT, Feb 27, 2017 | Published: 09:43 GMT, Feb 27, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Sylviya
11

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேர் ஜெரால்ட் கொஃப்மன் (Sir Gerald Kaufman) தனது 86ஆவது வயதில் காலமானார்.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காலமானதாக அவரது குடும்பத்தார்  அறிவித்துள்ளனர்.

ஜெரால்டின் மறைவு அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது எனவும் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனவும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ‘ஜெரால்டின் கொள்கைகள் மற்றும் ஏனையோருடன் நெருங்கிப் பழகும் அவரது குணம் ஆகியன அடிக்கடி அவரை ஞாபகப்படுத்தும்’ என தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் மிலிபன்ட் தெரிவித்துள்ளார்.

சேர் ஜெரால்ட் கொஃப்மனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg