Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணிகளை அபகரித்துக்கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபடுகின்றது: சிவமோகன்

In இலங்கை
Published: 10:46 GMT, Feb 27, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sivamohan

மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து வைத்துக்கொண்டு, பாடசாலை மாணவர்கள் மீதான பகிடிவதைகள், பாலியல் சேட்டைகள், சிகரட் வியாபாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டு வருகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இவற்றை நிறுத்தி இன்னும் ஓரிரு நாட்களில் கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் ராணுவத்தின் பிடியிலுள்ள சகல காணிகளையும் விடுவிக்காவிட்டால் பாரிய வெகுஜன போராட்டங்கள் உருவெடுக்குமென அவர் எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சிவமோகன் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக கேப்பாப்பிலவு நிலத்தில் ஒட்டுமொத்தமான கிராமத்தையே இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதென குறிப்பிட்ட சிவமோகன், பொதுமக்களின் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அங்கு சுவீகரிக்கப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டினார். இறுதியாக 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியால் வாக்குறுதி வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற ராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இப் பிரதேசங்களிலுள்ள காணிகளை இன்னும் ஒரிரு தினங்களுக்குள் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இல்லாவிட்டால் தற்போதைய போராட்டங்கள், பாரிய வெகுஜனப் போராட்டங்களாக வெடிக்குமெனவும் சிவமோகன் எச்சரித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg