Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் அஷ்வின்

In கிாிக்கட்
Updated: 11:19 GMT, Feb 27, 2017 | Published: 10:44 GMT, Feb 27, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Shailu
Ashwin

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இதன்படி அஷ்வின் 878 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவீந்தர ஜடேஜா மற்றும் அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 869 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அந்தவகையில், துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் அவுஸ்ரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை விட 66 புள்ளிகள் வித்தியாசத்தில் 873 புள்ளிகளுடன் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

புனே டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியாவிடம் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவிய போதும், அது அஸ்வின், கோஹ்லி ஆகியோரின் தரவரிசையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg