Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோவில் வீடு தீ வைக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு: சந்தேகநபர் கைது

In கனடா
Updated: 11:24 GMT, Feb 27, 2017 | Published: 11:03 GMT, Feb 27, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Risha
fire ont

ஒன்ராறியோ மாகாணத்தின் கவார்த்தா பகுதியில், வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது கொலை குற்றச்சாட்டு விதிக்கப்பட்ட நிலையில், அவர் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளமையால் உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்களையும் அதிகாரிகள் வழங்க மறுத்துள்ளனர்.

இளைஞர்கள் சிலர் தங்கியிருந்த வீட்டை இனந்தெரியாத நபரொருவர் தீ வைத்து கொளுத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg